Tuesday, April 23, 2024
-- Advertisement--

கர்லி ஹேர் வசீகரிக்கும் சிரிப்பு இயக்குனர் ஷங்கரின் மகள் வெளியிட்ட புகைப்படம்..!!! குவியும் லைக்ஸ்.

சங்கர் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு சென்று சினிமாவில் பல வேலைகள் செய்து பின் விஜய்யின் தந்தை SAC அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

சினிமாவை உள்வாங்கிக்கொண்ட சங்கர் சில வருடங்கள் கழித்து ஜென்டில்மேன் என்று முதல் படத்தை எடுத்தார் அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளியான முதல் படமே மக்களிடம் மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. காரணம் அந்தக் கதையில் வைத்திருந்த சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் தான் அந்த படத்தை தூக்கி நிறுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் இயக்கி பல வெற்றிகளை கண்ட இயக்குனர் தற்போது இந்தியன் 2 படத்தை தமிழில் எடுத்து வந்தார் லைக்கா நிறுவனத்திற்கும் சங்கருக்கும் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்தியன் 2 படப்பிடிப்பு 70% முடிந்து பாதியில் நிற்கிறது.

கமலஹாசன் காஜல் அகர்வால் ப்ரியா பவானி சங்கர் என்று ஒரு பட்டாளமே நடித்திருக்கும் படம் பாதியில் நிற்கும் நிலையில் சங்கர் திடீரென்று ராம்சரண் அவர்களை வைத்து தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார்.

சங்கர் இதற்கிடையில் தனது மகளை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக தனது மகளை அறிமுகம் செய்துள்ளார் ஷங்கர். இந்த படத்தை முத்தையா இயக்கிவருகிறார்.

தற்போது ஷங்கரின் மகள் அதிதி அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles