Monday, September 9, 2024
-- Advertisement--

கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு ஜோடி யார் தெரியுமா..!!! பக்கா ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்.

சிலம்பரசன் ஒரு நேரத்தில் சிம்புவின் படங்கள் அனைத்தும் வசூலில் பெரிய வெற்றி பெற்றது அதனால் முன்னணி நடிகராக வலம் வந்த சிம்பு சில பல பிரச்சினைகளால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அப்போது சிம்புவின் தொழில் போட்டியாளராக கருதப்படும் தனுஷ் தனது மார்க்கெட் வலுப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்து டாப் கியர் போட்டு ஹிந்தி, ஹாலிவுட் சினிமா சென்றார்.

சிம்புவின் ரசிகர்கள் சிம்புவிற்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஆளே மாறிவிட்டார் சிறுவயதிலிருந்து சினிமாவை நேசித்த சிம்பு தற்போது சினிமாவை விட்டு விலக காரணம் என்ன என்று கேட்டு வந்தார்கள் முதலில் நயன்தாராவை காதலித்த வந்த சிம்பு சில பிரச்சனைகளால் பிரிந்தார்கள் அதன்பின் ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு அந்தக் காதலும் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது.

நொந்து போன சிம்பு படங்களில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை அதன்பின் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் சிம்பு நடித்து இருந்தார். பவன் கல்யாண் நடித்து தெலுங்கில் பெரிய ஹிட் படமான அந்தப்படம் ஓரளவிற்கு தான் ஓடியது சிம்புவும் உடல் எடை கூடிக்கொண்டே போக பார்க்கவே ரசிகர்களுக்கு சங்கடமாக இருந்தது. எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் வருத்தப்படும் அளவிற்கு இருந்தது.

அதன்பின் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்திருந்தார் அந்தப் படம் இவருக்கு பெரிய கம்பக் ஆக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்தப் படம் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியானதால் பெரிதாக ரசிகர்களை கவராமல் போனது.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த சிம்பு கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு தனது உடல் எடையை அதி வேகமாக குறைத்தார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவின் ஸ்லிம் லூக் பெரிதாக பேசப்பட்டது எப்படி சிம்பு இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை குறைத்தார் என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

மாநாடு படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிய அளவில் திருப்திப்படுத்தியது தியேட்டர் உரிமையாளர்களுக்கு டாக்டர் படத்திற்கு பிறகு பெரிய வசூலை கொடுத்தது.

தமிழ்நாட்டில் மட்டும் மாநாடு படத்தின் வசூல் 55 கோடி என்கிறார்கள். சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மாநாடு திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சோனி லைவ் OTT தளத்தில் வெளியிட உள்ளார்கள்.

மாநாடு வெற்றி சிம்புவை ஒரு பக்கம் குஷிப்படுத்தி இருக்க சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் கௌதம் மேனனின் வெந்து தணிந்த காடு என்ற படத்தில் glimpse வெளியானது வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமார் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. முன்பெல்லாம் இந்த ஹீரோயின் படத்தில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு செய்யும் சிம்பு தற்போது கதைக்கு எது தேவையோ அவர்களை வைத்து படம் எடுங்கள் என்று கூறிவருகிறாராம். மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.

சிம்புவின் கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பது நம்ம பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் தானாம்.

அதிதி சங்கர் தமிழுக்கு முதல் முதலாக கார்த்தி முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தில் நடித்து வருகிறார் அதற்கு அடுத்த படம் சிம்புவிற்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர பக்கா ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles