விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் ஆலியா.இதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்தார். ஏற்கனவே ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் வந்தார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த நிலையில் ஆலியா சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன்பிறகு அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் அவர் பிறந்த நாளுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருப்பதாகவும் அதற்காக ஒரு சூப்பர் நடனம் ஒன்றை நீச்சல் குளம் பக்கத்திலும் ஆடி உள்ளார். இதோ அந்த வீடியோ