தற்போது பிரபலங்கள் பலரும் திடீர் மரணத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும் இளம் வயதில் இருப்பது சுற்றி உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிரபல இளம் நடிகர் சேதுராமன் சமீபத்தில் திடீரென நெஞ்சு வழியால் காலமானார்.
அவரை தொடர்ந்து தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் ஸ்ரீ லட்சுமி. இவர் ராஜ சேகரா சரித்ரா, சின்னாரி மற்றும் ருத்துகீதம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார். இவர் கணவர் ஒரு தொலைக்காட்சி தொடர் இயக்குனராவார்.
இந்நிலையில் இவர் சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று உயிர் இழந்தார்.
