சின்னத்திரையில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் அவர்கள் மரணம் அடைந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் சுருதி அதன் பின் வாணி ராணி சீரியலில் நடித்த இவர் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்,

மே 2022 கோயமுத்தூரில் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சேகர் உடற்பயிற்சி ட்ரையினராக இருந்து வந்தார். நீண்ட நாள் காதலரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதி.

சண்முகப்பிரியா அரவிந்த் இந்த ஜோடி அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியிடும் REELS மக்கள் மத்தியில் நல்ல ட்ரெண்டாகி வந்தது. ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் ஸ்ருதியை இன்ஸ்டாவில் பின்தொடர்கிறார்கள். அந்த அளவிற்கு ட்ரெண்டிங்கான ஜோடியாக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருந்தனர் ஸ்ருதி அரவிந்த்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை அரவிந்துக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

திருமணமாகி ஒரே வருடத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இந்த செய்தி கேட்டவுடன் சின்னத்திரை மட்டும் அல்ல அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.