சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இவர் மிகவும் இளம் வயதிலேயே சீரியலில் நடிக்கத் தொடங்கி விட்டார். இவரது நடிப்பு அழகிய முகம் என அனைத்துமே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்த சீரியலில் துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் முக்கிய கதா நாயகியாக மாறினார். அதன் பிறகு இவருக்கு அதே தொலைக்காட்சியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். அதன் பின் தன் சக நடிகரோடு கிசுகிசுவில் அடிபட்டதால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் ஷிவானி நாராயணன்.
அதன் பின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் கலக்கி வருகிறார். இவர் அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
ஆனால் தற்போது கட்டுங்கடங்காத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்பிற்காக இப்படி மாறி விட்டீர்களா என கருத்து கூறி வருகின்றனர்.