செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தன் பயணத்தைத் தொடங்கியவர் சரண்யா மோகன். இதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நெஞ்சம் மறப்பதில்லை என்று விஜய் டிவியில் வெளியான சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியலில் பாரதி கண்ட புதுமைப்பெண் போன்ற வேடம் என்பதால் இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்லதொரு இடத்தை சரண்யா மோகன் பிடித்தார்.
அத அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் இருந்து ஒரு சில காரணங்களால் வெளியேறிய சரண்யா மீண்டும் விஜய் டிவி ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இலங்கை நாட்டு வாலிபரை காதலித்து வருகிறார். அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். பொது இடத்தில் காதலனுக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.