கொரானோ சமயத்தில் ஊரடங்கு காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு ஏதும் நடக்காமல் இருப்பதால் எல்லாரும் சீரியல் சினிமா நடிகர்கள் எல்லாரும் வீட்டில் தான் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சரண்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தொடர்ந்து தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரானோ சமயத்தில் அனைவரும் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க இது மாதிரி உடை தான் சரிபட்டுவரும் என்று எண்ணி கூறி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடை நோயாளிகளுக்கு சரிப்பட்டு வருமா என கருத்து கூறி வருகின்றனர்.