தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகர் மகாவாடி பிரகதி. இவர் படங்களில் நடித்து புகழ் பெற்றதை விட தற்போது சீரியல் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் பிரகதி. இவர் தற்போது ஊரடங்கு காலத்தை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
தன் குடும்பத்தினருடன் தான் செய்து வரும் சுவாரசியமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது கடினமான யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் உடலை சரியாக சீராக வைத்துள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.