சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நீலிமா ராணி . இவர் கமலஹாசன் நடித்த இருந்த தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு சின்னத்திரையில் பல சீரியல்களில் இவர் கொடிகட்டி பறந்தார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வாணி ராணி, தலையணை பூக்கள், அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் சில சீரியல்களில் தயாரிக்கவும் செய்தார். சில வருடங்களுக்கு முன்பு இசைவாணன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார், தற்போது இவருக்கு இசை என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நீலிமா ராணி தன் பெயரை ஜோதிடரின் அறிவுரையின் பெயரில் நீலிமா இசை என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது அவர் கருப்பன் காட்டு வலசு என்ற புதிய படத்தில் கிராமத்து கதையை பின்னணியாகக் கொண்ட மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு பிறகு இவர் பெயர் பிரபலம் அடையும் என்று அவர் கருதுகிறார்.