விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் சீதாவாக நடித்தவர் மேக்னா. இவர் இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிகளிலும், ஜீ தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இதன் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியலில் இவர் நடித்தார். இதன் மூலம் மேலும் பிரபலம் பெற்றார்.
இந்நிலையில் இவர் நான்கு ஆண்டிற்கு முன் டான் டோனி என்பவரை திருமணம் செய்தார் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே கருது வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.
இருவருக்கும் இன்னும் குழந்தை இல்லை, இது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசி உள்ளார். மேலும் இவர் பொன்மகள் வந்தால் சீரியலில் நடித்த விக்னேஷுடன் பழகுவதால் விவாகரத்து பெற்றுவிட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.