பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் மூன்றாவது மருமகளாக நடிப்பவர் மீனா. மக்களின் அதிகமான வெறுப்பையும், எப்படி இந்த பொண்ணு இப்படி நடிக்கிறது என்று அசர வைக்கும் பாராட்டையும் பெற்றவர் மீனா என்கிற ஹேமா.
இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியை தொடர்ந்தார், அதனை தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் சீரியலில் நுழைந்தார்.
மெல்லத் திறந்தது கதவு, குலதெய்வம் மற்றும் சின்னதம்பி ஆகிய சீரியல்களில் இவர் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். மேலும் சில சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி மிக அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர் அந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.
இந்த சீரியலில் மீனா கர்ப்பமாக உள்ளார். அவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஏதாவது குட் நியூஸ் இருக்கா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு ஆமாம் நாம் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். என்று கூறியுள்ளார் மிகவும் யோசித்து இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் கூறினார்.