பிரபல தொலைக்காட்சியான சன் டிவி குழுமத்தின் இசை தொலைக்காட்சியில் பணியாற்றியவர் மணிமேகலை. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் நடன இயக்குனரான உசேனை காதலித்ததால் பெற்றோர்கள் எதிர்த்தனர். பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் டிவியில் பணிபுரிந்து வரும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை ஏறி கொண்டே வருகிறது.
இந்நிலையில் சொந்த வேலை காரணமாக கிராமத்திற்கு சென்று மணிமேகலை, ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப் பட்டதால் அங்கேயே செட்டிலாகிவிட்டார். சுமார் இரண்டு மாத காலமாக கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் வீட்டில் முறுக்கு சுடுவது, சாணி தட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
அங்குள்ள மக்களும் அவரை அன்பாக பார்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளார் மணிமேகலை. கிராமத்தில் உள்ள அழகான வாழ்க்கையை விட்டுவிட்டுகொரானோ அதிகமுள்ள சென்னை மாநகருக்கு வந்துள்ளதால், கொரானோ தேசத்திற்கு ஏன் செல்கிறீர்கள் என்று ரசிகர்கள் இவரை கமெண்ட் செய்து வருகின்றனர்.