பிரபல ஹிந்தி சீரியலில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாகும் சர்தார்னி என்ற சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார.
ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு என்று வீட்டில் இருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாகவும் மேலும் சேர்ந்த நடிகை சிம்ரன் என்பவரின் சம்பளத்தில் இருந்து 40 சதவீதத்தை பிடித்தமாக எடுத்து உள்ளதாகவும், அந்த சின்னத்திரை வட்டாரம் தெரிவித்தது.
இதனால் இந்த சீரியலில் இருந்து உடனடியாக விலகிவிட்டார் சிம்ரன். இனி அந்த தொடரில் அவர் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் முடிவெடுத்துள்ளார். மேலும் சம்பளம் குறைந்ததால் மட்டும் சீரியலில் இருந்து நான் விலகவில்லை. என்று கூறி ஒரு பெரியதொரு சர்ச்சையை கிளப்பினார்.
சம்பளத்தை குறைக்க சொல்லி தன்னிடம் வாக்குவாதம் செய்ததாகவும், மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறிய அவர், அதை விட முக்கியமான செய்தி ஒன்றையும் வெளியிட்டார்.
அந்த சீரியல் தயாரிப்பாளர் தனக்கு மறைமுகமாக பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சர்தாரிணி சீரியல் தயாரிப்பாளர்கள் மீது நேரடியாக புகார் அளித்துள்ளார். இதனால் இனி அவர் சினிமாவில் நீடிக்க முடியாது என பலரும் பேசி வருகின்றனர்
