இப்போது தொலைக்காட்சிகளில் பிரபலமான நட்சத்திர நடிகையாக ஜொலிப்பவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று வருகிறார். இந்த சீரியலில் இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் ஜோடி நம்பர்-1 போன்ற நடன நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த இவர். ஒரு தன் பெற்றோருக்கு சொந்த வீடு வாங்கும் அளவிற்கு உயர்ந்து உள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்ப்பை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் பிங்க் நிற சுடிதார் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் ரோஜா இதழ்களைப் போன்று உள்ளீர் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.