விஜய் டிவியில் பிரபல சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் ஆலியா மானசா. இவர் இதற்கு முன்பு சில சேனல்களில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

இந்த ராஜா ராணி சீரியலில் ஷெண்பா கதாபாத்திரத்தில் நடித்தார். இதே சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை இவர் காதலித்தார். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
தற்போது இவர் தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் தன் குழந்தையோடு எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்
