விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் ராஜா ராணி என்ற சீரியலில் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
அதே சீரியலில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ். இவர்கள் இருவரும் பெற்றோரிடம் தங்கள் காதலை கூறும்போது, ஆலியா வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சஞ்சீவியின் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த சீரியல் நிறைவுற்ற பிறகு ஆலியா சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கர்ப்பமாக இருந்த ஆலியா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இது குறித்த புகைப்படங்களும் தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவரது ரசிகர்கள் மீண்டும் பழைய பொலிவை பெற்றுள்ளனர் என்று கூறி வருகின்றனர்.