தற்போது தற்கொலைகள் பெரிதும் அதிகரித்து வருகின்றன. சென்னையை அடுத்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஐந்தாவது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் மிகவும் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர் சம்பவ இடத்தில் விரைந்து சென்ற கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கையறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்றும், மற்றொரு அறையில் பெண் சடலமும் கிடந்தது. இருவருக்கும் 45 முதல் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகின்றது. 2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வீட்டை முற்றிலுமாக சோதனை செய்த போலிசாருக்கு 2 அடையாள அட்டைகள் சிக்கின.
மேலும் அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான அடையாள அட்டையை வைத்திருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர் மற்றும் அவரது தங்கை கல்யாணி என்பது அந்த அட்டைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இருவரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரானோ தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பல சின்னத்திரை படப்பிடிப்புகளில் நிறுத்தப்பட்டன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர். இது போல இவர்களும் வறுமையால் வாடி தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பார்கள் என்று ஒரு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.