Thursday, September 10, 2026
-- Advertisement--

திடீர் என்று பேசமுடியாத நிலைக்கு சென்ற சென்ராயன்..!!! கொரோனா தாக்குதல் தீவிரம் ஆனதால் அவதி..!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் நடிகர் சென்ராயன் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

சென்ராயனின் இரண்டாவது படமும் வெற்றிமாறன் இயக்கதிலேயே ஆடுகளம் படத்தில் நடித்து இருந்தார். அவர் நடித்து வெளியான மூடர் கூட்டம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சென்ட்ராயன் . 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிவரை போட்டியாளராக இருந்தார் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சென்ராயன் ஜோடியாக ஜூலியுடன் சேர்ந்து நடனமாடி இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகளில் பங்கேற்ற கேப்ரியலா மற்றும் அஜித் இருவருக்குமே ஏற்கனவே கொரோனா தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதியான நிலையில் இன்று சென்ராயன் தனக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சோதனையில் தொற்று உறுதியானதை அவரே வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் பேசமுடியாமல் இருப்பதுபோல் தொற்று மிகவும் தீவிரமாக உள்ளதை அந்த வீடியோவின் மூலம் தெரிகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles