ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்றால் “செம்பருத்தி” தான். செம்பருத்தி தொடர் இரண்டு வருடங்களாக ஒளிபரப்பபட்டும் இன்றும் TRPயில் நம்பர் ஒன் இடத்தை பெற்று வருவது பெரிய விஷயம் தான். குறிப்பாக செம்பருத்தி அகிலாண்டேஸ்வரியின் நடிப்பு, மற்றும் ஆதி – பார்வதி காதல் என்று சுவாரசியமான கதாபாத்திரங்கள் கதையில் இருப்பதால் போர் அடிக்காமல் சுவாரசியமாக செல்கிறது.
இந்த தொடரில் பார்வதியாக நடித்து வரும் ஷாபனாவை தங்கள் வீட்டின் மகளாக பார்க்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்று உள்ளார். வனஜா பார்வதியை திட்டும் போது வனஜாவை திட்டும் மக்கள் இன்றும் உள்ளார்கள். அந்த அளவிற்கு பார்வதியாக ஷபானா மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்து உள்ளார்.
தற்பொழுது ஷபானா மாடர்ன் உடைகளை அணிந்து தனது சக நடிகைகளுடன் வித விதமாக புகைப்படங்களை எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் செம்பருத்தி ஷபானா, யாரடி நீ மோகினி சைத்ரா மற்றும் நட்சத்திரா, பூவே பூச்சூடவா புகழ் ரேஷ்மா அனைவரும் ஒன்றாக மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து உள்ளனர். ஷாபனாவை பாவாடை தாவணியுடன் பார்த்து வந்த ரசிகர்கள் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.