ஒரே சீரியலில் ஓஹோ வாழ்க்கை என்பதற்கு உதாரணம்தான் செம்பருத்தி ஷபானா. செம்பருத்தி என்ற ஒரே சீரியல் மூலம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்.
ஒரு சீரியல் வெற்றிகரமாக பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலை கண்டிப்பாக சொல்லலாம். முன்பெல்லாம் TRP ரேட்டிங்கில் சன் டிவியின் சீரியல்கள் மட்டுமே முதலிடத்தில் இருக்கும் அதன் பின் தான் மற்ற டிவி களின் சீரியல் இருக்கும் ஆனால் செம்பருத்தி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை தாண்டி டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்தது அதற்கு முக்கிய காரணம் அகிலாண்டேஸ்வரி ஆக நடிக்கும் பிரியா ராமன் மற்றும் பார்வதியாக நடிக்கும் ஷபானா தான்.
ஆதி பார்வதி காதலை வைத்து சீரியலை பல வருடங்கள் கொண்டு சென்றனர். குறிப்பாக பார்வதியாக நடித்த ஷபானாவை மக்கள் தன் வீட்டு மகள் போல நினைத்து வந்தனர் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் ஒரு உயிரோட்டம் இருந்தது. தற்பொழுது ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் முக்கிய கதாபாத்திரங்கள் ஆள் மாற்றம் செய்திருப்பதால் நீண்ட நாட்களாக இந்த தொடரை பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று போர் அடிப்பது போல் தான் உள்ளது.
ஒரே சீரியலில் பிரபலம் அடைந்த ஷபானா தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த போட்டோவில் பச்சை நிற உடையில் செம ஸ்டைலாக காரில் அமர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பார்வதியின் ரசிகர்கள் லைக் அள்ளி குவிக்கின்றனர்.