ஒரே சீரியலில் ஓஹோ வாழ்க்கை என்பதற்கு உதாரணம் தான் செம்பருத்தி ஷபானா. செம்பருத்தி என்ற ஒரே சீரியல் மூலம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர். ஒரு சீரியல் வெற்றிகரமாக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் அது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் கண்டிப்பாக சொல்லலாம்.

முன்பெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவியின் சீரியல்கள் மட்டுமே முதலிடத்தில் இருக்கும். அதன் பின் தான் மற்ற டிவிகளில் சீரியல்கள் இருக்கும் ஆனால் செம்பருத்தி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் டிஆர்பி முன்னணி இடத்தை பிடித்தது.

இதற்கு முக்கிய காரணம் அகிலாண்டேஸ்வரி ஆக நடிக்கும் பிரியா ராமன் மற்றும் பார்வதியாக நடிக்கும் ஷபானா தான். குறிப்பாக பார்வதியாக நடித்த ஷபானாவை மக்கள் தன் வீட்டு மகள் போல் நினைத்து வந்தனர். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் ஒரு உயிரோட்டம் இருந்தது.

ஷபானா சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று இருவருக்கும் கோலகமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு முன்பு ஷபானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.











