சின்னத்திரை ஜீ தமிழ் சீரியலில் மிகவும் பிரபலமானவர் ஜனனி அசோக்குமார். அவர் வெள்ளித்திரையில் முதல் படமான “நண்பேன்டா” என்ற படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார்.
அவர் சின்ன திரையில் முதல் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான “மாப்பிள்ளை” தொடரில் ஸ்ரீஜாவிற்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலம் ஆனார். ஆனால் இப்போது ஒளிபரப்பாகும் ஜீ தமிழில் “செம்பருத்தி” சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக “ஐஸ்வர்யா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக தமிழ் சின்ன திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தற்பொழுது இவரது புகைப்படங்கள் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் ஜனனி சேலையில் செம அழகாக ஹோமிலியாக இருக்கிறார்.