சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபான விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மார்க் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏடிஎம் இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுத்திறை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால் தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்வது குறித்து டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி சென்னையில் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை எடுத்து பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டாஸ்மார்க் நிறுவனம் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம்
— Trichy IT (@TrichyIT) April 29, 2023
இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு#TASMAC has launched an automated liquor vending machine at a commercial complex in #Chennai pic.twitter.com/gPQESfnJRs