சசிகுமார் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் TOURIST FAMILY இந்த படம் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துடன் வந்ததால் முதல் நாள் பெரிய ஒரு வரவேற்பை பெறாமல் இருந்தது.
இரண்டாம் நாளில் அப்படியே தலைகீழாக மாறியது TOURIST FAMILY படத்தை பார்த்த மக்கள் இந்த படத்தை சோசியல் மீடியாவில் கொண்டாடிவந்தனர். நாளுக்கு நாள் இந்த படத்திற்கு மக்கள் வர HOUSEFULL ஆனது தியேட்டர்கள். பல இடங்களில் TOURIST FAMILY திரைப்படத்திற்கு அதிக ஸ்கிரீன் ஒதுக்கினார்கள்.
65 கோடியில் எடுத்த ரெட்ரோ படத்தை 14 கோடியில் எடுத்த TOURIST FAMILY ஜெயித்தது என்பது ஆரோக்கியமான விஷயமே. RETRO திரைப்படம் சுமாராக இருந்தது அதனை பெரிதாக build up செய்தார்கள். தற்பொழுது ரெட்ரோவின் கலெக்சன்னை TOURIST FAMILY மிஞ்சிதை பார்த்து திரை உலக தயாரிப்பாளர்கள் ஆச்சர்யத்தில் உள்ளார்கள். இதில் இருந்து ஒரு விஷயம் நன்றாக புரிவது சம்பளத்தை ஏற்றுவதற்காக இயக்குனர்கள் பெரிய ஹீரோவை தேடி செல்கிறார்கள் ஆனால் கதையை கோட்டைவிடுகிறார்கள்.
TOURIST FAMILY படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந் வயது 24 இந்த சிறுவயதில் தரமான படத்தை எடுத்த இளம் இயக்குனரே இதே போல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தால் வெற்றிகள் வந்து சேரும்.