சரண்யா பொன்வண்ணன் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் நாயகன் என்ற படத்தில் 1987-ஆம் ஆண்டு அறிமுகமானார். நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சரண்யா அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக இவர் நடித்த தவமாய் தவமிருந்து படம் ஒன்று போதும் இவர் எவ்வளவு பெரிய நடிகை என்பதை நிரூபிக்க அந்த அளவிற்கு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சரண்யா பொன்வண்ணன்.
அதுபோல முத்துக்கு முத்தாக என்ற படத்தில் நடித்து மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்தார். ராம் படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். செயற்கை இல்லாத இவருடைய நடிப்பு இவருக்கு பெரிய பிளஸ்.
சரண்யா 1995ஆம் ஆண்டு பொன்வண்ணன் என்ற பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது சரண்யாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். ஒருவர் பிரியதர்ஷினி பொன்வண்ணன் மற்றொருவர் சந்தினி பொன்வண்ணன்.
இன்று சரண்யா பொன்வண்ணன் அவர்களின் மூத்த மகள் பிரியதர்ஷினி அண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.