சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழ் சினிமாவில் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
சந்தானத்தின் ஒன்லைனர் நகைச்சுவையாக இருந்ததால் சந்தனத்தின் காமெடிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தனர் அந்த நேரத்தில் உள்ளே புகுந்த சந்தானம் வரிசையாக படங்களில் நடித்து சரசரவென்று முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து நின்றார்.
டிவி நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கிய சந்தானம் நகைச்சுவை நடிகராக பல லட்சங்கள் சம்பாதித்து வந்தார். தற்பொழுது சந்தானத்திற்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக ஜெயித்து விட்டோம் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது தொடர்ந்து ஹீரோவாக சந்தானம் நடித்து கொண்டிருக்கிறார்.
என்ன தான் ஹீரோவாக நடித்தாலும் மக்கள் சந்தானத்தின் நகைச்சுவையை மிஸ் செய்கிறோம் திரும்ப நகைச்சுவை நடிகராகவே வந்துவிடுங்கள் என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து மறுபடியும் ஒரு கலகலப்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது.
சந்தானம் 2004 ஆம் ஆண்டு தனது பெற்றோர்களால் பார்க்கப்பட்ட பெண் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது சந்தானத்திற்கு 2 குழந்தைகள் உள்ளது.
சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலுக்கு தனது மகனுடன் சந்தானம் சென்றுள்ளார். கோவிலின் சிறப்பு அம்சங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்ட சந்தானம் அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
சந்தானத்துடன் அவருடைய மகன் நிபுன் வந்திருந்தார் அட நம்ம சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என்று அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.