Sunday, September 6, 2026
-- Advertisement--

ஜேசன் சஞ்சய் பற்றி விஜய் கூறியது என்ன? மனம் திறந்த சந்தீப் கிஷன்!

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்மா’. தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவானது.

இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் அளித்த பேட்டியில் ‘சிக்மா’ படம் குறித்து கேட்கப்பட, அதற்கு பதிலளித்த அவர் “நான் விஜய் அவர்களை முதன் முதலில் சந்திக்க `லியோ’ பட துவக்க விழாவின் போது சென்றேன். லோகேஷ் என்னை அழைத்து சென்றார். படம் சம்பந்தப்பட்டவர்கள் நிறைய பேர் இருப்பார்களே என நான் அங்கு தாமதமாக தான் சென்றேன்.

லோகேஷும் என்னை விஜய் சாரிடம் கூட்டி சென்றார். அவர் மிகவும் இனிமையாக, பணிவாக நடந்து கொண்டார். நான் நடித்த படங்களை பற்றி பேசி, மாநகரம் படத்தில் நான் பேசிய வசனத்தை குறிப்பிட்டு நிறைய பேசினார். என் மகனுக்கு உங்களை மிகவும் பிடிக்கும் எனக் கூறினார். சஞ்சய் என்னை முதலில் சந்திக்க வந்த போது அதே விஷயத்தை சொன்னார்.

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், இந்தப் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன் என அனைத்தையும் சொன்னார். இப்படியான நபர்கள் என்னுடைய படங்களை கவனிக்க வேண்டும் என நினைத்தோம், அது நடந்துவிட்டது என்பது எனக்கு பெருமையாக இருந்தது.

அவர் மிகப்பெரிய சினிமா பாரம்பரியம் உள்ள குடும்பத்திலிருந்து வந்து என்னை ஒருவர் கவனித்திருக்கிறார் என்பது எனக்கு பெரிய விஷயம். ஆனால் நான் அவருடன் படம் செய்ய விரும்பிய காரணம், அவருக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் அவருடைய அடையாளத்தை, அவரே உருவாக்க உழைக்கிறார். அப்படி இருக்கும் ஒருவருடன் எப்படி பணியாற்றாமல் இருக்க முடியும்.” என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles