தமிழ் தெலுங்கு என இரண்டு சினி உலகத்திலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினா.ர் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிம்புவுக்கு இரண்டாம் காதலியாக இவர் நடித்து இருந்தார். அப்போது சிம்புவுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு படம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.