Friday, October 16, 2026
-- Advertisement--

சமந்தா வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் என்ன?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த 2025ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தனது கணவரான ராஜ் நிடிமோரு கதை எழுதி, சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ’மா இண்டி பங்காரம்’. இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், ’மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தான் தாயாகப்போவதை உறுதி செய்துள்ளார். மேலும், இதற்காக அவர் தற்காலிகமாக திரைத்துறையிலிருந்து மகப்பேறு விடுப்பு எடுக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ” நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல்கள் முற்றிலும் உண்மை என்பதை அவரே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரை உலகினரும் அவரது ரசிகர்களும் சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என பல போராட்டங்களையும், சவால்களையும் கடந்து வந்த சமந்தா, தற்போது தாய்மையின் புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளார். அவரது கர்ப்ப அறிவிப்பும், மெட்டர்னிட்டி லீவ் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles