சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவிற்கு தமிழ்நாட்டில் எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல தெலுங்குவிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த அளவிற்கு தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து தனது மார்க்கெட்டை பெரிதாக வைத்து இருந்தார் சமந்தா. சில ஹிந்தி படங்களிலும் கமிட் ஆகி இருந்தார்.
மறக்கமுடியாத கதீஜா :
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வெளிப்படுத்திருந்தார். இந்த படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் இளமை துள்ளும் உடையிலும் சரி நடிப்பிலும் சரி அசத்தி இருந்தார் சமந்தா.
அந்த படத்தை பார்த்தவர்கள் சமந்தாவின் குறும்புத்தனமான நடிப்பை ரசித்தார்கள் . காதுவாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு தமிழில் அவர் ஏற்கனவே நடித்த தெலுங்கு திரைப்படம் ஆன யசோதா திரைப்படம் வெளியானது ஆனால் அந்த அளவிற்கு பெரிய வெற்றி அடையவில்லை இதற்கு இடையில் சமந்தா myositis என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
Myositis நோயால் அவதி:
சமந்தாவிற்கா இந்த நிலைமை கதீஜா என்ற கதாபாத்திரத்தில் அவ்ளோ அழகா நடிச்சிருந்தாங்க அழகாவும் இருந்தாங்க அவங்களுக்கு இப்படி ஒரு நோயா என்று ரசிகர்கள் வருந்தும் அளவிற்கு சமந்தாவின் முகம் வாடி போய் இருந்தது.
உடல்நிலை குறித்து கண்கலங்கிய சமந்தா:
பல பேட்டிகளில் சமந்தா பேசிக் கொண்டிருக்கும் போதே தன் உடல்நிலை குறித்து கவலையுடன் கண்கலங்கி பேசியிருப்பார் ஒவ்வொரு நாளும் இந்த நோயுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் யாருக்கும் இதுபோன்று நிலைமை வரக்கூடாது ஆனால் கண்டிப்பாக இதை நான் எதிர்கொள்வேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது மீண்டும் மீண்டு வருவேன் என்று வருத்தத்துடன் கண்கலங்கி பேசியது பார்க்கும் நமக்கே கண்கலங்கும்படி இருந்தது.
கோடிக்கணக்கில் மருத்துவ செலவு செய்யும் சமந்தா?
சமந்தா விஜய தேவர் கொண்ட நடித்த குஷி திரைப்படம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ஏற்கனவே கமிட்டான சில படங்களில் நடித்து வந்த சமந்தா திடீரென்று படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. myositis நோயிலில் இருந்து குணம் அடைய கோடிக்கணக்குகளில் செலவு செய்து மருத்துவம் பார்த்து வருவதாக தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுரைப்படி நடக்கும் சமந்தா:
ஆயிரம் மருந்துகள் இருந்தாலும் மன தைரியம் முக்கியம் STRESS, DEPRESSION இதனை தவிர்க்க வெளியிடங்கள் சென்று வரச் சொல்லி மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அதனால் சமந்தா தனது நெருங்கிய தோழிகளுடன் வெளி நாடுகள் சென்று தனிமையான இடங்களில் தனக்கு பிடித்தது போல பொழுதை கழித்து வருவதாகவும் சினி வட்டாரத்தில் கூறுகின்றனர்.
சமந்தா என்ற அழகிய பதுமையை எப்போது இனி மீண்டும் திரையில் பழையபடி பார்க்க போகிறோம் என்று ஏக்கத்தோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். மீண்டு வாருங்கள் சமந்தா.