Thursday, March 28, 2024
-- Advertisement--

லோகேஷ் இயக்கும் Thalapathy 67 படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்கும் பிரபல முன்னணி நடிகை…!!! வேற லெவல் தகவல்.

தளபதி விஜய் நடித்த சமீபத்தில் வெளியாக பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல வசூலை செய்தது. இருந்தாலும் விஜயின் திரைப்படம் என்றால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தவும் ஆனால் பீஸ்ட் திரைப்படம் திருப்தி படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

தற்பொழுது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு திரைப்படத்தில் சரத்குமார், ஷியாம், சங்கீதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ் இன்று பெரிய பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

வாரிசு திரைப்படம் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் பல வருடங்களுக்குப் பிறகு அனைவரும் ரசிக்கும் கதையாக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள் படக்குழுவினர். குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள் என்று உருவாகி வரும் வாரிசு 2023 பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள இந்நிலையில் தனது அடுத்த படமான தளபதி 67 திரைப்படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிட உள்ளார்கள்.

விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது லோகேஷ் சமீபத்தில் எடுத்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது அது மட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழில் வெளியான அத்தனை படத்தின் வசூலையும் முறியடித்தது.

தற்பொழுது லோகேஷ் விஜயின் 67-வது திரைப்படத்திற்காக களத்தில் இறங்கி உள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய திரைப்படமாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தைப் பொறுத்தவரை 50% என்னுடைய திரைப்படமாகும் 50% விஜய் அண்ணா அவர்களின் திரைப்படமாகவும் அமைந்தது ஆனால் தளபதி 67 முழுக்க முழுக்க என்னுடைய திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

லோகேஷ் ஸ்டைலில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வரும் இந்நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜய்க்கு பல படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா தளபதி 67 திரைப்படத்தில் வில்லியாக நடிக்க உள்ளார் என்ற சுவாரசியமான தகவல்களும் வெளிவந்துள்ளது ஒரு வேலை சமந்தா வில்லியாக நடித்தால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்பவே ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இதையும் படிங்க :ஸ்விம்மிங் குளியல் கணவருக்கு ரொமான்டிக் கிஸ் காஜலின் கோவா ட்ரிப் புகைப்படங்கள்..!!! ரொமான்டிக் காஜல் இதோ.
இதையும் படிங்க : மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!/a>

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles