தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தான் சமந்தா. ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட சமந்தா நம்பர் ஒன்னு நடிகையாக வலம் வந்தார்.
தனது காதலர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்களில் சில மனக்கசப்புகளால் விவாகரத்தும் செய்தார். அதன் பின் சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல கோடிகள் செலவு செய்து அதற்கு சிகிச்சை பெற்று வந்தார் பூரணமாக குணம் ஆகாத சமந்தா அந்த நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். தற்பொழுது படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு சமந்தா சில webseriesல் மட்டும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே சமந்தா உள்ள இந்த நிலையில் மேலும் அவருக்கு ஒரு அதிர்ச்சி. இன்று சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு மாரடைப்பால் காலமானார். தந்தையின் இறப்பு சமந்தாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தனது சமூகவலைத்தள பக்கத்தில் UNTILL WE MEET AGAIN DAD என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.
சமந்தாவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.