தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை தான் சமந்தா இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது அது மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் மார்க்கெட்டை பிடித்து உள்ள சமந்தா சமீப காலமாக மயோசிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக பல கோடிகள் செலவு செய்து சிகிச்சை பெற்று வருகிறார்.
படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சமந்தா சில மாதங்களாக சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார் குறிப்பாக சமந்தா நடித்து சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப் தொடர் Amazon Prime OTT தளத்தில் வெளியானது.
சமந்தாவின் நடிப்பில் கிளாமர் தூக்கலாக இருந்தது லிப் லாக் காட்சிகளும் இருந்ததது. ஒரு சில எபிசோட் நன்றாகவே இருந்தது.

சில நாட்களுக்கு முன் ரசிகர் ஒருவர் கொஞ்சம் உடல் எடையை அதிகரியுங்கள் என்று சமந்தாவிடம் சமூக வலைதளங்களில் கூறியிருந்தார் அதற்கு சமந்தா நான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது தெரியும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி எனது உணவை எடுத்துக் கொள்கிறேன் கடுமையான அலர்ஜி எதிர்ப்பு உணவை எடுப்பதால் என் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தயவு செய்து மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள் நாம் 2024 இல் இருக்கிறோம் வாழு வாழ விடு என்று கூறி எமோஷனலாக கூறி உள்ளார்.
ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த சமந்தாவிற்கு இளம் வயதிலே இப்படி ஒரு நோய் வந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.










