தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நடிகையாக உள்ளவர் சமந்தா. இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தமிழ் நன்கு பேச தெரிந்த நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.
இவர் நடித்த பாணா காத்தாடி படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. மேலும் இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் இருந்து வருகிறார்.
தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோரோடு இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர் சென்னையில் படிப்பை முடித்து விட்டு சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சமந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்கும் பெண்கள் வேலையை பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் தற்போது உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்.