சமீபகாலமாக நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு ஏதுமின்றி வீட்டில் இருந்து வருகின்றனர். முன்பெல்லாம் இன்ஸ்டா மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியே சென்ற புகைப்படங்கள், போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் பயனாக தற்போது அவருக்கு 3 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
வீட்டில் பொழுதை கழித்து வரும் சாக்ஷி அகர்வால் சமீபகாலமாக இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதற்கு என்று தினமும் சிகை அலங்காரங்களை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து இவரது ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப் படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு செலவு தேவையா கருத்து கூறி உள்ளார் . இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.