ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் களமிறங்க தொடங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு சீரியல் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.
இந்த தொடரில் சிபுவிக்கு ஜோடியாக நடித்து வந்த பிரியங்கா நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்களின் பேவரைட் தொடரான ரோஜா சீரியலுக்கு டிஆர்பி ரேட்டும் எகிறியது. ரோஜா சீரியல் முடிந்தவுடன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரில் தைரியமாக பெண்ணாக நடித்துள்ளார். இந்த தொடர் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளார். மலேசியாவில் உள்ள முருகர் கோவிலில் பிரியங்காவின் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர் ராகுல் வர்மா என்கின்ற தொழிலதிபரை திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.