Thursday, October 10, 2024
-- Advertisement--

ராக்கெட்ரி – நம்பி நாரயணன் விளைவு – திரை விமர்சனம்

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் ” நம்பி நாரயணன்”, முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்(ISRO) விஞ்ஞானி நம்பி நாராயணின் வரலாறு மிகத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் மாதவன்.

கதை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் நம்பி நாராயணன் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.,அது என்னவென்று ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தில் நேர்காணலின் பொழுது நடிகர் சூர்யாவிடம் தான் பட்ட இன்னல்களை விளக்குகிறார் நம்பி நாராயணன்.

நம்பி நாராயணன் இஸ்ரோவில் பணிபுரியும் பொழுது அதன் தலைவர் விக்ரம் சாராபாய் அவர்களின் முழு ஒத்துழைப்போடு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் எவ்வாறு சேட்டிலைட்களை விண்வெளிக்கு அனுப்பலாம் என்ற முயற்சியில் திட நிலையை தொடர்ந்து திரவ நிலையிலும் எவ்வாறு விண்கலங்களை அனுப்பலாம் என்று அமெரிக்காவிலுள்ள பிரிட்ஜ்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு முடிந்து அதன்மூலம் நாசாவில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார் ஆனால் விக்ரம் சாராபாயின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இஸ்ரோவில் பணி புரிய திருவனந்தபுரம் வருகின்றார்.

பின்பு ஸ்காட்லாந்து சென்று திரவநிலை உபகரணங்களை ஒரு ரூபாய் செலவில்லாமல் இஸ்ரோக்கு கொண்டு செல்கின்றார். அடுத்து இஸ்ரோவில் பணிபுரியும் 52 விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு சென்று பிரான்ஸ் செல்கிறார். பின்பு அங்குள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் திரவ நிலை விண்கலங்களை விண்ணில் செலுத்த
பயிற்சி எடுத்து அதிலும் வெற்றி அடைகிறார். விண்கலத்தை 180 செகண்ட் வரை பரிசோதித்து அதன் உராய்வு வெற்றி அடைந்ததன் காரணமாக அதற்கு விக்ரம் சாராபாய் நினைவாக விகாஸ் என்று பெயரிடுகிறார். பின்பு கிரையோஜெனிக் எஞ்சின் உபகரணங்களை வாங்க ரஷ்யா சென்று அங்கும் வெற்றி அடைகிறார் ரஷ்யா கிரையோ ஜெனிக்கு இன்ஜின்களை இந்தியாவுக்கு விற்பதை அறிந்து அமெரிக்கா ரஷ்யா மீது கோபம் கொள்கிறது அதனைத் தாண்டி
அந்த கிரையோஜெனிக் இன்ஜின்களை நம்பி நாராயணன் இஸ்ரோவிடம் சேர்கின்றார் பின்பு ஒரு மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ரகசியங்களை பாகிஸ்தானைச் சேர்ந்த மரியம் என்ற பெண்ணிடம் விற்று விட்டதாக கேரள காவல்துறை அவரை கைது செய்கிறது அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இறுதியில் நம்பி நாராயணன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த திருவனந்தபுரம் மக்களே குடும்பத்திற்கு எதிராக மாறிவிடுகிறார்கள்.,பின்பு நடைப்பெற்ற விசாரணையில்
அவர் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. எனினும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த நஷ்ட ஈடு அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாயும், கேரள அரசு 1.5 கோடியும் நஷ்டஈடாக வழங்கியுள்ளன. மேலும் மத்திய அரசு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷன் விருதை அவருக்கு வழங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் பட்ட பாடு அளவிடமுடியாதாது. அவரால் தான் கிரையோஜெனிக் எஞ்சின்கள் மூலம்கிரகத்தில் விண்கலங்களை அனுப்ப முடிந்தது.

நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக வாழ்ந்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும் பின்னணி இ்சை.

பலம்:

திரைக்கதை
விண்வெளி கட்டமைப்பு
காட்சி அமைப்பு

பலவீனம்:
நல்ல படத்தில் பலவீனம் இல்லை

நம்பி நாரயணன்- நம்பிக்கை

இது போன்ற படங்களை நாம் கொண்டாட மறந்தால் தமிழ் சினிமாவில் வரும் நல்ல படங்களின் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். நம்பி நாரயணன் அவர்களை கொண்டாடடுவோம்.

Rating: 5/5
Verdict : BLOCKBUSTER HIT MUST WATCH

Review by Ramprakash

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles