சன் தொலைக்காட்சி,விஜய் தொலைக்காட்சி போன்றவற்றில் சிறு கலைஞனாக அறிமுகமாகி, நகைச்சுவை புயலாக மாறி, கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தனக்கென்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவில் தற்போது நிறைய படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்த மாறி படம் இவர் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல் இவர் மகள் இந்திரஜாவும் நடிப்பு நடனம் என சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் சற்று குண்டாக இருந்தாலும், இவர் திறமைக்கு முன் அது சிறிதாக தெரிகிறது. விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது உலக நடன நாளை முன்னிட்டு தந்து நடன திறமையை வெளிக்காட்டும் விதமாக காலில் சலங்கை காட்டி நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் நடனம் யார் வேண்டுமானாலும் கற்கலாம் என கருத்தும் தெரிவித்துள்ளார்.