சமீபகாலமாக திரையுலகை பொறுத்தவரை நிறைய பிரபலங்கள் இறந்து வருகின்றனர். இந்த வருடம் நிறைய இழப்புகளை திரையுலகம் சந்தித்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் டிவி சார்ந்த பிரபலங்களும் இறந்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளர் நடராஜசிவம். இவருக்கு அந்த காலத்தில் மிகப்பெரிய ரசிகர் இருந்தனர்.
இவர் எப்பொழுது வானொலியில் பேசுவார் என்று பலர் வானொலி பார்த்து வானொலி பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தனர் என்றும் கூறுவர். இந்நிலையில் இவர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். இவருக்கு வயது 74. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். நடராஜசிவம் இலங்கை அரசின் ரேடியோ சிலோன் காலனி மூலம் பிரபலமானவர், திரைத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழ், சிங்களம் போன்ற மொழி நாடகங்களிலும் நடித்து வந்தார். இலங்கை வானொலி உள்பட பல ஊடகங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவிற்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி புகழ் அப்துல் ஹமீது தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.