சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கி வெளியான படம் `கருப்பு’. திரையரங்குகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த சூழலில், படத்தின் கிராபிக்ஸ் சார்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதில் அளித்த ஆர் ஜே பாலாஜி, “ஒரு Head Replacement ஷாட் இருக்கிறது என்றால், அதனைச் சரியாக செய்ய 8 – 10 மாதங்கள் தேவைப்படும்.
மேலும், அதனைச் செய்யும் நிறுவனத்திற்கு 8 – 10 மாதங்களுக்கு முன்பே கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் சொன்ன நேரத்துக்குள் எங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை. அதேநேரம், அதனைப் படத்திலிருந்து நீக்கவும் முடியாது, ஏனென்றால், அவை கதைக்குள் இருக்கின்றன. படத்தில் சிங்கம் காட்சிகள் இருக்கிறது என்றால், அதனை எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பயன்படுத்தி படத்தில் சேர்த்திருக்கிறோம்.
தியேட்டரில் இதைப் பெரிய குறையாகச் சொல்லவில்லை. ஆனால், ஓடிடியில் வந்ததும் சொல்கிறார்கள் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களால் சரிவர செய்ய முடியவில்லை. எங்களுக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்தது. அதற்காக, அதனை யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என எதிர்பார்க்கக் கூடாது.










