Wednesday, July 17, 2024
-- Advertisement--

நயன்தாரா மேடம் மகனாக நடித்துவிட்டேன்…!!! எனக்கு ஒரே ஒரு ஆசை..!!! ரித்விக்கின் ஆசை நிறைவேறுமா?

ரித்விக் ராக்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் இந்த குட்டிஸ் ரித்விக். கோயமுத்தூர் பிறந்த தேதி இவர் யூடியூப் சேனலில் பல கெட்டப்களில் போட்டு பார்வையாளர்களை அசத்தியவர். ரிப்போர்ட்டர் கலாட்டா என்று செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்திசேகரிப்பவர் இடையே நடக்கும் சுவாரசியமான நகைச்சுவை பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய வைரலாக ரித்விக் யார் என்று அனைவரும் தேட ஆரம்பித்தார்கள்.

கோயம்பத்தூரில் இரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் அவருடைய அப்பா அம்மா ஓய்வு நேரத்தில் ரித்விக்கு நடிக்க கற்று கொடுத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ரித்விக்கின் தந்தை ஜோதி ராஜ் மற்றும் அவருடைய அம்மா ஆஷா அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ரித்விக்கை நடிக்கவும் வைத்தார்கள் அதில் வித்தியாசமான கெட்டப் போட்டுக்கொண்டு ரித்விக் அசத்தி இருந்தார்.

பலருக்கும் அது பிடித்துப்போக அவருடைய யூடியூப் சேனல் பெரிய பிரபலமானது. தொடர்ந்து நகைச்சுவையான வீடியோவை பதிவிட்டுள்ள வந்த ரித்விக் அவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான O2என்ற திரைப்படத்தில் ரித்விக் நயன்தாராவின் மகனாக நடித்திருந்தார்.

சீரியசான கதையில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் ரித்விக் சமீபத்தில் ரித்விக்கிடம் யாருடன் நீங்க நடிக்க ஆசைப்படுறீங்க என்று கேட்டதற்கு நான் விஜய் சாருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.

விஜய் சாருக்கு மகனாக நடிக்க எனக்கு ஆசையாக இருக்கு என்று தனது ஆசையை வெளிப்பட கூறியிருந்தார்.

விஜய்க்கு மகனாக ரித்விக் நடித்தால் சூப்பராக இருக்கும்ல என்று ரசிகர்கள் இப்போவே ஆலோசித்து வர தற்போது ரித்விக் கார்த்தியின் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விரைவில் விஜய் படத்தில் ரித்விக் நடிக்க வாழ்த்துக்கள்.

தற்பொழுது RITHU ROCKS சேனல் 2.06 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles