அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார்.
அமெரிக்கா – சீனா இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச்சிறந்த உறவு இனிவரும் காலங்களில் அமையும். நாம் இணைந்து ஒரு அற்புதமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், “அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் போட்டி நாடுகளாக இல்லாமல், கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும். அதிபர் டிரம்புடன் எலான் மஸ்க் (டெஸ்லா), டிம் குக் ( ஆப்பிள்), ஜென்சன் ஹுவாங் (என்விடியா) மற்றும் லாரி ஃபிங்க் ( பிளாக்ராக் ) உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணித் தொழில் அதிபர்கள் பெய்ஜிங் சென்றுள்ளனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இருதரப்பும் ஆலோசித்தது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், அந்த ஜலசந்தியை மீண்டும் திறக்கச் செய்ய சீனா எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த முதல் கட்டச் சந்திப்பின்போது, தைவான் விவகாரம் மற்றும் வர்த்தக வரி விதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.










