Thursday, June 19, 2025
-- Advertisement--

குரு பெயர்ச்சி 2025 2027 – ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

ரிஷப ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

காது, மூக்கு, தொண்டை, வாய், பற்கள் எல்லாம் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தொண்டையில் வரும் சிறிய பிரச்சனை கூட பெரியதாகும். தொழில் இல்லை, வியாபாரம் இல்லை, படிப்பு இல்லை தடையாகிவிட்டது, படிப்பை சில பிரச்சனைகளால் நிறுத்திவிட்டேன் என்று கவலைப்பட வேண்டாம் இனி படிப்பில் வெற்றி காண்பீர்கள் போற்றக்கூடிய அளவிற்கு தொழில் கிடைக்கும். நோய் அல்லது சிறிய சர்ஜரி, கிட்னி ஸ்டோன் போன்ற நோய்கள் எல்லாம் குணமாகி நல்ல ஆரோக்கியம் பெருகும்.

பெண்களுக்கு அதிக அற்புதத்தை ஏற்படுத்தி மரண பயத்தை நீங்கும் ஒரு மனிதனுக்கு மரண பயம் நீங்கினாலே போதும் அனைத்தும் கைகூடும். ரோகினி நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய ராசி ரிஷப ராசி அதனால் குழப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே உங்களுக்கு கூடிய குழப்பம் தீரும் பணத்தட்டுப்பாடு தீரும் மனதிற்கு தெம்பும் சந்தோஷமும் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்திலிருந்து செய்தி கிடைக்கும்.

தொழில் கண்டிப்பாக வெற்றி ஆகும் ரொம்ப நாள் அடிமை தொழில் எல்லாம் மாறி பிசினஸ் செய்வீர்கள், தொழில் தொடங்குவீர்கள், எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும், பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதம் ஏற்படும், ஏற்றம் கிடைக்கும் ரிஷப ராசி நேயர்களுக்கு சனி அடுத்த 2 1/2 வருடம் பதினோராம் இடத்திலிருந்து போகிறார் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.

இந்த சமயத்தில் ரிஷபம் இந்த குரு பெயர்ச்சியில் இருந்து முன்னேறவில்லை என்றால் உங்கள் மேல் தான் தவறு. அதிகமான வண்டி வாகன மாற்றங்கள் ரொம்ப பெரிய சந்திப்புகள் ப்ரோமோஷன் எல்லாம் அடிக்கடி வாங்குவது எல்லாம் ஏற்படும். வார்த்தைகளில் மட்டும் ரிஷபம் அடிப்படும் வார்த்தையில் சட்ட சிக்கல் கூட வரும்.

பரிகாரம்

கண்டிப்பாக கஞ்சனூர் சுக்கிர தளத்திற்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles