ரேகா நாயர் மறைந்த விஜே சித்ராவின் நெருங்கிய தோழி சித்ராவின் மரணத்திற்கு நியாயம் கிடைத்து ஆக வேண்டும் என்று சித்ரா இறந்த தினத்திலிருந்து இன்று வரை தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். சித்ராவின் மரணத்திற்கு அவருடைய கணவர் ஹேமந்த் காரணம் மற்றும் பின்னணியில் சில நபர்கள் இருக்கிறார்கள் என்று பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வந்தார்.

ரேகா நாயர் சன் டிவியில் பைரவி, வம்சம் போன்ற சீரியலிலும் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர், பகல் இரவு, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்திருந்தார். புதிய தலைமுறை கலர்ஸ் டிவி புதுயுகம் போன்ற செய்தி சேனல்களிலும் பணி புரிந்து வந்தார்.

தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சிக்காக பார்த்திபன் அவர்கள் ரேகா நாயகரை தொடர்பு கொண்டு இப்படி ஒரு கதை இருக்கு ஆனால் அந்தக் கதையில் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் படி ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் குழந்தைக்கு பாலூட்டும் படி இருக்கும் இந்த காட்சியில் நடிக்க உனக்கு ஓகேவா என்று கேட்டார் நான் மறுக்காமல் ஓகே என்று கூறினேன்.

உங்கள் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்று கூறினேன். இரவின் நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது தைரியமாக நிர்வாணமாக நடித்திருந்தேன் அப்போது என்னுடைய ஒரு பக்கம் மட்டும் வெளியில் தெரியும் என்று கூறியிருந்தார் அந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்ட நான் அந்த கதாபாத்திரத்திற்கு இது தேவை என்றால் நிச்சயம் செய்யலாம் என்று நடித்துக் கொடுத்தேன்.

நான் தான் அந்த காட்சியில் நடித்தேன் என்பது நிறைய பேருக்கு தெரியாது உற்று நோக்கினால் மட்டுமே தெரியும். இரவின் நிழல் படத்தில் அந்த காட்சி ஒரு அழுத்தமான காட்சியாக இருக்கும். படத்தை பார்த்தவர்கள் அந்த கட்சியை பார்க்கையில் காமமாக தெரியவில்லை கண்கலங்கி அழுதுவிட்டோம் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. உங்கள் மேல மரியாதையை கூடுது என்று பாராட்டினார்கள். நான் கலையை நேசிக்கிறேன் என்று ரேகா நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.