மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ப் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் ஒரு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது.
இதற்கிடையே வளைகுடாவில் போர் நீடித்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
வளைகுடாவில் போர்ப் பதற்றம் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஆரம்பித்த போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக மாறிமாறி தாக்கிக் கொள்வது முடிவுக்கு வந்தாலும் கூட இதுவரை அங்குப் பதற்றம் முழுமையாக விலகவில்லை.
இதனால் ஹார்முஸ்ல ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அங்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அவர் இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பிப்ரவரி 28 முதல் மத்தியக் கிழக்கில் போர் தொடங்கிவிட்ட போதிலும், இந்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறது. ஆனால், அந்த நிலை மாறலாம் என்பது போல சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.










