கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. பிறகு அவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் நடிக்கிறார்.
தற்போது புஷ்பா 2 , ரெயின்போ ஆகிய புது படங்களின் நடிக்கும் அவர் வரும் ஜூலை மாதம் புஷ்பா 2 படத்தில் தன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
ஜூலை, ஆகஸ்டில் அவரது காட்சிகள் படமாக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா தனது முதல் படமான கிரீக் பார்ட்டியில் நடிக்க ஒப்பந்தமான அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார்.
கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடிக்க முதலில் தனக்கு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அதை நான் ‘பிராங்க் கால்’ என்று நினைத்து சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை தயவு செய்து போனை வைத்து விடுங்கள் என்று சொல்லி உடனே அந்த நம்பரை பிளாக் செய்து விட்டேன்.
பிறகு அப்படத்தின் தயாரிப்பாளர்கள் என் நண்பர்கள் மூலமாகவும் எனது வகுப்பு ஆசிரியர் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டார். கடைசியாக எனது ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்தேன். அவர்களிடம் நான் எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை எனக்கு நடிப்பு வராது என்று சொன்னேன்.
அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. உடனே என்னிடம் சில வசனங்கள் கொடுத்து என்னால் எப்படி பேச முடியுமோ அப்படி பேசும்படி சொன்னார்கள். அந்த வசனங்களை நான் சிறப்பாக பேசியதால் திருப்தி அடைந்த அவர்கள் பிறகு என்னை கிரிக் பார்ட்டி படத்தில் நடிக்க தேர்வு செய்தனர்.