Home STAR OF THE WEEK இறந்து ஒருநாள் கடந்தும் புகழ் பெரும் தாத்தா..!! மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!!

இறந்து ஒருநாள் கடந்தும் புகழ் பெரும் தாத்தா..!! மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!!

ஏழைகளின் பசியைப் போக்கி வந்தவர் மனிதநேய மனிதர் ராமு தாத்தா. இவர் 1967ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் மலிவு விலையில் உணவு வழங்கி வருகிறார். சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இவர் ஹோட்டலில் விலையும் மிகவும் சிறியதாக இருக்கும், முதலில் காலணாவுக்கு வழங்கிய உணவு தற்போது 10 ரூபாய் வரை இட்லியை வழங்கிக் உள்ளார். .

இவரது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள வில்லூர் கிராமம். வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சென்று ராமு தாத்தா அதனுடைய பெயரில் தனது 17வது வயதில் ஈர்க்கப்பட்டு ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது மனைவியின் கம்மலை விற்று ஹோட்டலை ஆரம்பித்தார்.

இந்த பத்து ரூபாயும் கடைக்கு சாப்பிட வருபவர்கள் கட்டுப்படி ஆகாது என்று வற்புறுத்தியதன் பேரில் தான் இவர் விலை ஏற்றத்தை செய்தாராம். காலையில் இரண்டு வகை சட்னியுடன் சுடச்சுட இட்லி, தோசை பொங்கல், மதியம் 2 வகை பொரியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் சாப்பாடும் தலா ரூபாய் 10 ரூபாய் வழங்கி வந்துள்ளார் ராமு தாத்தா. அப்படி விலை என்ன தான் குறைவாக இருந்தாலும் இவர் சாப்பாட்டின் தரத்தில் எந்தக் குறைவும் இல்லையாம். பொன்னி அரிசியில் தான் இவரது சாதம் செய்தார். அவ்வளவு சுவையாக இருக்கும் . இது தவிர ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக சாப்பாடு வழங்கி வந்து மனதால் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள ராமு தாத்தா இவர் நேற்று அகாலமரணம் அடைந்தார் . வயது முதிர்வு காரணமாக இவர் இறந்துள்ளார்.

இவர் மறைந்து ஒரு நாட்களுக்கு மேலாகியும் இவர் மறைவிற்கு பல பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தனது இணையப்பக்கத்தில் வாயிலாக இவரது மறைவிற்கு இரங்கல் கூறி வருகின்றனர்.

Exit mobile version