தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து சினிமாவில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள் என்று அழைத்த மீனா ரஜினிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தில் இருந்தார்.

மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார் மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தியது அனைவருக்கும் தெரிந்ததே.

மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்களுக்கு நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் நிலையை கருதி மருத்துவர்கள் நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று மீனா அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள். மீனாவின் கணவருக்கு நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது அன்புக் கணவரை இழந்து வாடிய மீனா சில மாதங்களாக எந்த ஒரு புகைப்படங்களும் வெளியிடாமல் மீடியாவை விட்டு விலகியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்கள் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி இந்த கடினமான நேரத்தில் எங்களுடன் இருந்தீர்கள்.
தயவு செய்து எனது கணவர் குறித்து தவறான செய்திகளை இணையத்தில் பரப்ப வேண்டாம் நான் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீளவில்லை என்று கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அதன்பின் சில நாட்கள் ஓய்வில் இருந்தார் மீனா கணவர் இல்லாமல் தனது திருமண நாளில் மறைந்த கணவருக்கு நன்றி சொல்லி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். நீண்ட மாதங்களாக சோகத்தில் இருந்து மீளாமல் இருந்த மீனாவை நேற்று அவருடைய நெருங்கிய தோழிகள் நடிகை ரம்பா சங்கவி மற்றும் சங்கீதா க்ரிஷ் அனைவரும் மீனாவின் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று மீனாவுடன் தங்களது நேரத்தை செலவிட்டு உள்ளனர்.


இந்த சந்திப்பு கவலையில் இருந்த மீனாவிற்கு சற்று ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்தாக தகவல்.