Saturday, October 10, 2026
-- Advertisement--

தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி நியமனம்.. ராமதாஸ் வரவேற்பு, விஜய்க்கு முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப் பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ்நாட்டின் நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உடனடி நியமனம் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், “தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஸ் குமார் அகர்வால் ஆகிய மூவரும் அனுபவமிக்க உயர் அலுவலர்கள் ஆவர்.

தற்போது பதவியேற்றுள்ள தமிழக அரசு, யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ள மூவர் பட்டியலிலிருந்து தமிழ்நாட்டிற்கு சிறந்த மற்றும் திறமையான அதிகாரியை தேர்வு செய்து ஓரிரு நாட்களுக்குள் நிரந்தர டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles